சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே அகரம் அகழாய்வில் கல் தூண் கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப். முதல் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதுவரை 850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
கீழடியில் இதுவரை மண் பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளை கள், சங்கு வளையல்கள், சுடுமண் மற்றும் கண்ணாடி பாசிகள், சூதுபவளம் படிகம், எடைக் கற்கள், அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம், வெள்ளி காசு, உறைகிணறுகள், சுடுமண் காதணி போன்றவை கண்டறியப்பட்டன.
கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள், வாள் போன்றவை கண்டறியப் பட்டன. அகரத்தில் பாசி மணிகள், உறைகிணறு போன்றவை கண்டறியப்பட்டன.
தற்போது ஒரு அடி உயரம், ஒரு அடி அகல கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தோண்டும்போது கல் தூணினின் உயரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago