வெள்ளையனே வெளியேறு இயக்க வெற்றி நாள் கொண்டாட்டம் :

இந்தியாவில் சுதந்திர போராட் டத்தின் ஒரு பகுதியாக வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் 1942-ம் ஆண்டு ஆக.9-ம் தேதி தொடங் கியது. அந்த நாளை நினைவுகூ ரும் வகையில், ஆண்டுதோறும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆக.9-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகளான கே.துரைசாமி, மைக்கேல், சவரி முத்து, மாணிக்கம் ஆகியோர் பாராட்டப்பட்டரை. மேலும், அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன் கதராடை அணிவித்து, நிதி உதவி வழங்கினார். நிர்வாகிகள் எம்.பாலகிருஷ்ணன், கோவி.மோகன், பூபதி, ஆர்.செல்வம், சீதாராமன், அடைக்கலசாமி, அலாவுதீன், சாகுல்ஹமீது, வல்லம் பாட்சா, அசோக்ராஜ், ஆதிநாராயணன், சாந்தா ராமதாஸ், சித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE