கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோவில்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் கோவில் பட்டி தினசரி சந்தை சாலையைச் சேர்ந்த ராஜதுரை (27) என்பதும், அப்பகுதியில் ஒருவரை தாக்கி மிரட்டியதும் தெரியவந்தது. ராஜதுரை மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 7 வழக்குகள், மேற்கு காவல் நிலையத்தில் 11 வழக்குகள், திருநெல்வேலி மாவட்டம் கே.வி நல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என, மொத்தம் 19 வழக்குகள் உள்ளன. அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago