அரக்கோணம் ரயில் நிலையத்தில் - 300 மீட்டர் தொலைவுக்கு தானாக ஓடிய மெமு ரயில் :

By செய்திப்பிரிவு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு தானாக ஓடிச்சென்று நின்ற மெமு ரயிலால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சாதாரண மின்சார பயணிகள் ரயில் (மெமு) நிறுத்தப்பட்டது. இந்த ரயில் மீண்டும் எப்போது இயக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை. பயணிகள் மற்றும் பைலட் (ரயில் இன்ஜின் ஓட்டுநர்) இல்லாமல் இருந்த மெமு ரயில் நேற்று மாலை 4.15 மணியளவில் தானாக ஓடியது.

இந்த மெமு ரயில் காஞ்சிபுரம் செல்லும் ரயில் தடத்தில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு பயணித்து நின்றுவிட்டது. மேலும், மெமு ரயிலின் ‘பான்டா கிளிப்’ எனப்படும் உயர் அழுத்த மின்கம்பியை உரசி செல்லும் இணைப்பு உடைந்துவிட்டது. ஓட்டுநர், பயணிகள் யாரும் இல்லாமல் தானாக ஓடி நின்ற மெமு ரயில் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்