கரோனா விதிமுறைகளை மீறி - அமராவதி ஆற்றில் மக்கள் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு :

By செய்திப்பிரிவு

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து தொடங்கும் ஆறு, கரூர் மாவட்டத்தில் நிறைவடைகிறது.

கரோனா பரவல் காரணமாக,ஆடி அமாவாசை தினத்தையொட்டி கோயில்களில் பக்தர்கள்திரள்வதை தடுக்கும் வகையில்,பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் நேற்று ஏராளமானோர் திரண்டனர். ஆற்றில் குளித்து விட்டு, குடும்பத்தில் உயிர் நீத்தோருக்காக திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர். இந்த பூஜையில்புரோகிதர்கள் கலந்துகொண்டு பூஜைகள், பரிகாரங்கள் செய்தனர்.

இதுகுறித்து சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, "கோயில்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளதால், ஏராளமானோர் நேற்று அமராவதி ஆற்றை தேர்ந்தெடுந்து அங்கு திரண்டனர். போலீஸார் சென்று, வழிபாடுகளில் பங்கேற்றோரை எச்சரித்து அனுப்பினர். ஆனால், பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்" என்றனர்.

இதேபோல, பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், ஆடி அமாவாசையையொட்டி திருமூர்த்திமலையிலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழக்கமான சிறப்புபூஜைகள், பக்தர்களின்றி நடைபெற்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர். திருமூர்த்திமலை, அமராவதி பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்