நீலகிரி மாவட்டத்துக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள்வருகை அதிகரித்துள்ளதால், உதகை - மேட்டுப்பாளையம் சாலை,கோத்தகிரி உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், பிற மாவட்டங்களுடன் உதகையை இணைக்கும் சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியதால் பர்லியாறு முதல் கூடலூர் கக்கநள்ளா வரை தேசிய நெடுஞ்சாலை 67-ல் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
குன்னூர் மலைப்பாதையில் மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும்குறுகிய பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கான ஆய்வு பணிகள் உதகையில் நடந்தன. தேசிய நெடுஞ்சாலை ஆணைய கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள்தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago