பிடிஓ வீட்டில் போலீஸார் சோதனை :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் கடந்த 2018-19-ம் ஆண்டில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் தருமபுரி ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு புகார் மனு அனுப்பினர்.

இதுதொடர் பாக தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் அப்போதைய காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி செந்தில் நகரில் உள்ள வடிவேலன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், சோதனை தொடர்பாக போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்