மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கஞ்சி படைத்தல், பால் அபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் கரோனா காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்துள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கஞ்சி படைத்தல், பால் அபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் கரோனா பரவலைத் தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 10, 11-ம் தேதிகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago