மாமல்லபுரத்தை அடுத்த பையனூர்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். தையல் தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி.
கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை விஷப்பூச்சி கடித்தால் தனது மனைவி இறந்துவிட்டதாக ரவிக்குமார் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த ஆனந்தியின் தாய்தேவகி மகளின் தலையில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். மேலும், இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீஸில் புகார் அளித்தார்.
இதன்பேரில், மாமல்லபுரம் போலீஸார் ரவிக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரவிக்குமார் மனைவியை கட்டையால் அடித்ததில் உயிரிழந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago