புவனகிரி, கீரப்பாளையம் வட்டாரத்தில் - சம்பா பருவ முன்னேற்பாடு பணிகள் தீவிரம் :

By செய்திப்பிரிவு

புவனகிரி, கீரப்பாளையம் வட்டாரத் தில் சம்பா பருவத்திற்கான முன் னேற்பாடு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

புவனகிரி மற்றும் கீரப்பாளையம் வட்டாரத்தில் குறுவை பருவ நெல் அறுவடை பணிகள் ஒருபக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் சம்பா நடவு பருவத்திற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வரு கின்றனர். அதன்படி வயல்களில் கோடை உழவு மேற்கொண்டு வயலை விவசாயிகள் தயார் படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "சம்பா பருவத்துக்கு தரமான விதை, போதுமான உரங்கள் தட்டுப் பாடு இல்லாமல் வேளாண் கிடங் களிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் தனியார் கடைகளில் உரங்கள், விதைகள் அதிக விலைக்கு விற்பது நடைபெற்று வருகிறது. மேலும் நாற்றங்கால் தயார் செய்து விதை விட்ட பிறகு முளைப்பு திறன்குறைவாக இருந்தால் விதைகள் தரமான விதைகளா என்ற சந்தே கம் ஏற்படுகிறது.

பல இடங்களில் தரமற்ற விதைகள் விற்கப்படுகிறது. வேளாண்துறை அதிகாரிகள் தனியார் உர மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் முழு மானியத்துடன் கிடைக்கவும் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்