செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக் கம் சார்பில் 3-ம் ஆண்டு விதைத்திருவிழா நேற்று விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக தேவார பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தேவார பாடலும், அதன் பொருளும் கூறி இறைவணக்கம் செலுத்தினர். கலை நிகழ்ச்சியாக பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவினர் பறையிசை நடைபெற்றது. கரும்பு கண்ணதாசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி தொடக்கவுரையாற்றினார்.
விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பாஸ்கர், எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன்,ரத்தின புகழேந்தி, சுந்தரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
அதைத்தொடர்ந்து நடைபெற் றக் கருத்தரங்கில இயற்கை வழி வேளாண்மை மற்றும் மரபு ரக நெல்களின் மகத்துவம் குறித்து பாஸ்கரும், மதிப்பு கூட்டுதலின் அத்தியாவசியமும் வழிமுறைகளும் பற்றி பாரி மணிமொழியும், பலாமரம் ஆராய்ச் சியாளர் பெ.ஹரிதாஸ் பலாவின் சிறப்பு பற்றியும் எடுத்துரைத்தனர்.
முன்னோடி உழவர்களான ரங்கநாயகி, பொறியாளர் பன்னீர்செல்வம், ராமராஜன் கோபுராபுரம், சிலம்புச்செல்வி மகிழ் அங்காடி, எருமனூர் கோவிந்தராஜ், விருத்தாசலம் முதலாம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவி ஆர்த்தி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
விழாவில் காலை உணவாக மாப்பிள்ளை சம்பா கஞ்சி மற்றும் மதிய உணவாக தூயமல்லி சாம்பார் சாதம், கருப்பு கவுனி இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மரபு நெல்விதைகள், மரபு விளைப் பொருட்கள், துணிப்பைகள், காய்கறி விதைகள், கீரை விதைகள், பனிக்கூழ், மண்பாண்ட பொருட்கள்,மூலிகை மருந்துகள், மாட்டுத் தீவன விதை புல், மரத்தினாலான பொருட்கள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. மேலும் காட்சிக்காக மூலிகை செடிகள், முளைப்பாரி, விதைகள், காய்கறிகள் ஆகி யவை வைக்கப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை ரமேஷ்கருப்பையா செய்திருந்தார். முன்னதாக கோட்டேரி சிவக்குமார் வரவேற்றார். பார்த்திபன் நன்றி கூறினார்.
மரபு ரக நெல்களின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago