திண்டுக்கல் அருகே மீன்பிடித் திருவிழா :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகேயுள்ள அடியனூத்து ஊராட்சி பகுதியில் உள்ளது பெருமாள்கோவில்பட்டி கிராமம். இவ்வூரில் ஒற்றுமையை வலியுறுத்தி மீன்பிடித் திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.

சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால் அங்குள்ளகுளம் வறண்டு இருந்தது. இதனால் மீன்பிடித் திருவிழா நடத்தப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பியது.

குளத்தில் கிராமத்தினர் மீன் குஞ்சுகளை விட்டனர். தற்போது குளத்தில் தண்ணீர் குறைந்து வருவதையடுத்து நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. குளக்கரையில் அமைந்துள்ள கன்னிமார் கோயிலில் சிறப்பு பூஜை நடத்திய பின்னர், ஊர் நாட்டாண்மை வெள்ளைத் துண்டை வீசி மீன்பிடித் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து கிராமத்தினர் திரண்டு குளத்தில் இறங்கி மீன்பிடித்தனர்.

நல்லாம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, வாழைக்காய்பட்டி, கண்ணாபட்டி, வேடபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களும் மீன்பிடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்