ராமநாதபுரத்தில் வசிக்கும் கணிக்கர் பழங்குடியின மக்க ளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க சென்னை பல்கலைக்கழக மானுட வியல் வல்லுநர் கள ஆய்வு மேற் கொண்டார்.
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி வ.உ.சி. நகரில் 75 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட கணிக்கர் பழங்குடியின மக்கள் (குடுகுடுப்பை அடித்து குறி சொல்வோர்) வசித்து வருகின்றனர். இவர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இம்மக் களை ஆய்வு செய்து சாதிச் சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் ராமநாதபுரம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறை வல்லுநர் மா.முனிராஜ், ராமநாதபுரம் வ.உ.சி. நகர் பகுதிக்கு வந்து கள ஆய்வு செய்தார்.
கள ஆய்வின் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு கணிக்கர் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்க பரிசீலிக்கப்படும் என கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago