திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக.10 முதல் 15 வரை - கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் முகாம் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் வழங்கும் முகாம் ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவை மூலம் கடன் வழங்கும் முகாம் ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளான நத்தம், நாகல் நகர், கொடைக்கானல், பழநி, ஒட்டன்சத்திரம், ம.மூ.கோவிலூர், சித்தையன்கோட்டை, பேகம்பூர், கன்னிவாடி ஆகிய கிளைகளில் ஆகஸ்ட் 10-ம் தேதியும், வேடசந்தூர், வத்தலகுண்டு, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய கிளைகளில் ஆகஸ்ட் 11-ம் தேதியும் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களான அடியனூத்து, பி.மேட்டுப்பட்டி, இடையகோட்டை, பாப்பம்பட்டி, பல்லாநத்தம், மார்க்கம்பட்டி, சிறுகுடி, புதுஆயக்குடி, நாகைய ன்கோட்டை, சித்தையன்கோட்டை ஆகிய கிளைகளில் ஆகஸ்ட் 12-ம் தேதியும், நல்லமநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், பஞ்சம்பட்டி, ஏ.வெள்ளோடு, நத்தம், மடூர், சாணார்பட்டி, பி.கொசவபட்டி, வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய கூட்டுறவு வங்கி கிளைகளில் ஆகஸ்ட் 13-ம் தேதியும் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் இன மக்கள் முகாமில் விண்ணப்பித்து கடன் பெறலாம். விண்ணப்பிப்பவர்கள் மதத்துக்கான சான்று, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, உணவு பங்கீடு அட்டை, வருமானச் சான்று, கடன் பெறும் தொழில் விவரம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்