குமரி பாலன் நினைவிடத்தில் - இந்து அமைப்பினர் அஞ்சலி :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரத்தை சேர்ந்த குமரி பாலன், 1993-ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வைத்து கொலை செய்யப்பட்டார்.

பிரம்மபுரத்தில் உள்ள குமரி பாலனின் நினைவிடத்தில் ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில் இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குமரி பாலனின் 28-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினை விடத்தில் நேற்று வீரவணக்கம் செலுத்துதல் மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா, நெல்லை கோட்ட செயலாளர் சோமன், குமரி பாலனின் சகோதரர் குமரி ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன், நாஞ்சில் ராஜா உட்பட இந்து அமைப்பினர் திரளாக கலந்துகொண்டு வீர வணக்கம் செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்