ரத்ததான முகாம் :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைவர் முத்துச்செல்வன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் நாராயணசாமி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் லட்சுமி சித்ரா, ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். ரோட்டரி சங்க செயலாளர் தயாள் சங்கர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்