மத்திய அரசு தங்கப்பத்திரம் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. தங்கப்பத்திரம் விற்பனை அஞ்சலகங்கள் மூலமாக இன்று (9-ம் தேதி) முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,790 ஆகும். கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களிலும், அனைத்து துணை அஞ்சலகங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
இந்த பத்திரத்தை பாதுகாப்பது எளிது. தனி நபர் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம் தேவை. அத்துடன் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் என இவற்றில் ஏதேணும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொடுத்து தங்கப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை கோவில்பட்டி முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago