தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே எம்பிசி மற்றும் டிஎன்டி சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிவுகள் வரும் வரை இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துல்லியமான புள்ளி விவர அடிப்படையில் சமூகநீதி அறிஞர்களைக் கொண்ட குழு அமைத்து சட்டப்படியான வகுப்புவாரிய இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும்.
மருத்துவ சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக கொடுத்த பிறகே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும். நீட் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சமூகநீதி கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago