ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மன்னார்குடி அருகே கர்ணாவூரில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்துள்ளதால், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் முனியாண்டி, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் வனிதா தேவி, கிளைச் செயலாளர் மருதையன், பாமணி கூட்டுறவு சங்க இயக்குநர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்