தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு கைவிட கோரிக்கை :

By செய்திப்பிரிவு

நாகை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில், அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம், பணி நிறைவு பாராட்டு விழா ஆகியவை நேற்று நடைபெற்றன. மாவட்டத் தலைவர் இளவரசன் தலைமை வகித்தார்.

வட்டத் தலைவர் மேகநாதன் வரவேற்றார். மாநில பொருளாளர் மு.பாஸ்கரன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ப.அந்துவன்சேரல் நிதி அறிக்கையையும் வாசித்தனர்.

மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். முடிவில், நாகை வட்டச் செயலாளர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.

பின்னர், பணி ஓய்வுபெறும் சி.வாசுகி, என்.புகழேந்தி, எம்.தமிழ்வாணன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை போராட்ட ஆயத்த மாநாட்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். போராடி பெற்ற உரிமைகளைப் பறிக்கும் வகையிலான தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்