670 பேருக்கு வீட்டுமனைப் பட்டா :

By செய்திப்பிரிவு

நாகை வட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில், விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அக்கரைப்பேட்டையில், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த 670 பேருக்கு, தொண்டு நிறுவனங்களால் ஏற்கெனவே கட்டி கொடுக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளுக்கு ரூ.7 கோடியே 20 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் வி.சகிலா, கோட்டாட்சியர் மணிவேலன், அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அழியாநிதி மனோகரன், வட்டாட்சியர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்