பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் : ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் வீரமாணிக்கபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரமநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.

நிர்வாகிகள் அண்ணாதுரை, துரை பாக்கியநாதன், வெனிஸ் ராஜ் உமையொரு பாகம், உஷா மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், “சுதந்திர தினத்துக்கு பிறகு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் போது அவர்களுக்குரிய நிர்வாகத்தில் காலிப்பணியிடம் இல்லை எனில் அவர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுவதுடன் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கும் அறிவிப்பையும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE