ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா தங்கம் வென்றதை கொண்டாடும் வகையில், வந்தவாசியில் பொதுமக்களுக்கு தலா 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி காய்கறி வியாபாரி கொண்டாடினார்.
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது வெற்றியை நாடு முழுவதும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தனது மகிழ்ச்சியை, ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வாங்கியதை மக்களும் நினைவுகூறும் வகையில் நேற்று கொண்டாடினார்.
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக சாலையில் காய்கறி கடை நடத்தி வரும் சேட்டான்(36) என்பவர், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தலா 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி அசத்தியுள்ளார். சுமார் 500 பேருக்கு 1 டன் தக்காளியை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “ஒவ்வொரு விளையாட்டிலும் இந்தியா சாதனை படைக்க வேண்டும். விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களை மத்திய, மாநில அரசுகள் ஆதரித்து ஊக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago