கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத - கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை : தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கடையின் உரிமையா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தி.மலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறும் போது, “கரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக வேண்டும் என்றால், தமிழகம் முழுவதும் தடுப்பூசியை செலுத்திக் கொள் ளாதவர்கள் இருக்கக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கடையில் உள்ள வியாபாரிகள் முகக்கவசம் அணிய வேண்டும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும்.

செய்யாறில் ஒரு நாளைக்கு 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கின் றனர். முதல்வருடன் வணிகர் சங்க பேரமைப்பு இணைந்து பணியாற்றுகிறது. எனவே, ‘சீல்’ வைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத உரிமையாளர்களின் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பே பரிந்துரைக்கும். கடையில் உள்ளவர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது என்ற வாசகத்தை கடை முன்பு எழுத வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE