தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுகிறார்.
நிதியமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் வெளியிடுகிறார்.
கடந்த 2001-ல் அதிமுகஆட்சியின்போது நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், பட்ஜெட் தாக்கலின்போது நிதிநிலைமை குறித்த வெள்ளைஅறிக்கையை வெளியிட்டார்.
ஆனால், இப்போது பட்ஜெட் தாக்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை அறிக்கை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago