அவிநாசி நல்லாற்றை சீரமைப்பதற்காக தாமரைக்குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியின் பிரதான நீராதார குளங்களாக தாமரைக்குளம், சங்கமாங்குளம் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில், அவிநாசி தாமரைக்குளத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பதாகக் கூறி, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவிநாசி வருவாய் துறையினர் கூறும் போது, "அவிநாசியில் உள்ள நல்லாற்றை சீரமைப்பதற்காக, தகவல் மட்டும் அளித்துவிட்டு தாமரைக்குளத்தில் பொதுப்பணித் துறையினர் மண் அள்ளி வருகின்றனர். பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாமரைக்குளமாக இருந்தாலும், அனுமதிகடிதம் வைத்திருப்பதாக கூறியுள்ளனர். இருப்பினும், மண் அள்ளுவது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியது: அவிநாசியின் இயற்கை வளமான தாமரைக்குளம், சங்கமாங்குளம் உள்ளிட்டவைகளை தூர்வாரி, மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். குளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொதுப்பணித் துறையினரே மண் அள்ளுவது சரியல்ல. மேலும், நல்லாற்றை சீரமைக்க ரூ.4 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தாமரைக்குளத்தில் மண் அள்ளுவது முறையல்ல. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்