விதிகளை மீறிய துணிக்கடைக்கு ரூ. 25,000 அபராதம் :

By செய்திப்பிரிவு

கரோனா விதிகளை மீறிய துணிக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி, அடுமனைகள் (பேக்கரி) உள்ளிட்டபிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து சூப்பர்மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் ஆகியவை சனிமற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் இயங்க தடை விதிக்கப் படுகிறது என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் குமரன் சாலையிலுள்ள பிரபல துணிக்கடைக்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வியாபாரம்நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின்பேரில்,வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன்நேற்று ஆய்வு செய்தார். அப்போது கடையில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப் பட்டிருப்பதை பார்த்து, கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்