கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 506 முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 140-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சாப்பர்த்தி, மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண் சங்க முறைகேடுகளை கண்டறிய துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சாப்பர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2014-19-ம் ஆண்டு காலத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 17 ஆயிரத்து 770-ம், மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2018-19-ம் ஆண்டு காலத்தில் ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 736-ம் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி சரக துணைப்பதிவாளர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார்.
அதன்படி முறைகேட்டில் ஈடுபட்ட சாப்பர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உதவி செயலாளர் குமார், சரக மேற்பார்வையாளர் ஜானகிராமன், நிர்வாகக் குழு உறுப்பினர் அல்லிமுத்து மற்றும் மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago