மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் டாக்டர்.மஸ்தான் மற்றும் ஆணையகுழு உறுப்பினர்கள் வரும் 15-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களின் குறைகளைக் கேட்க உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான் மற்றும் ஆணைய குழு உறுப்பினர்கள் வரும் 15-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர்.
அந்தச் சமயத்தில், சிறுபான்மைசமுதாயத்தைச் சார்ந்த தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் காலை 11.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியவும் உள்ளனர்.
இந்த கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் சிறுபான்மையினர் நல மேம்பாட்டுக்கான தக்க கருத்துகளைதெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago