காலிப் பணியிடங்களை போர்க் கால அடிப்படையில் அரசு நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 15-வது மாவட்ட மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தமிழரசி, ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வைரவன் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட இணைச் செயலர் லட்சுமி வேலை அறிக்கை வாசித் தார். பொருளாளர் சுப்புக்காளை நிதி நிலை அறிக்கை வாசித்தார். முன்னதாக, மாவட்ட துணைத் தலைவர் சுதந்திர கிளாரா வரவேற்றார். கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். மாநில பொதுச் செயலர் நூர்ஜகான் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்தார். சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் செயல்படும்போது, சத்துணவு மையங்களை மட்டும் மூடுவதைக் கைவிட வேண்டும். அரசுத்துறை பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago