திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.
திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி - கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் இருந்து கோட்டையிருப்பு வழியாக தேவரம்பூர் கண்மாய் வரை கால்வாய் செல்கிறது. ஆனால், கோட்டையிருப்புப் பகுதியில் இக்கால்வாயையும், அதன் அருகே உள்ள கால்வாய் புறம்போக்கு நிலத்தை யும் சேர்த்து 6 ஏக்கர் வரை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் சிலர் புகார் தெரிவித்தனர். வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததை அடுத்து திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர், இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் தலைமையில் நேற்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அப்போது அந்த நிலத்தில் இருந்த தென்னை, கொய்யா, புளி, வேம்பு உள்ளிட்ட 500 மரங்கள் அகற்றப் பட்டன. வாழை, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களும் அழிக்கப்பட்டன. மீட்கப்பட்ட 6 ஏக்கரின் தற்போதைய மதிப்பு ரூ.6 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago