கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு நாளில் - கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமை வகித்து, கருணாநிதியின் திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொழிலதிபரும், திமுக பிரமுகருமான கே.வி.எஸ்சீனிவாசன், அஸ்லாம், திருமலைச் செல்வன், பாபா மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், நகர திமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை எதிரே மற்றும் 5 ரோடு ரவுண்டானா அருகே நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் வழங்கினார்.

இந்நிகழ்வில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதா நவாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், பர்கூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில விவசாய அணி துணை தலைவரும், பர்கூர் எம்எல்ஏ.வுமான மதியழகன் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்