தமிழ்ப் பல்கலை.யில் முனைவர் பட்ட சேர்க்கை :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தகுதி பெற்றவர்களுக்கு சேர்க்கைக் கான ஆணையை வழங்கிய துணைவேந்தர் கோ.பாலசுப்ர மணியன், பின்னர் கூறியது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி, புதிய விதி முறைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முதன்முதலாக பொது முனைவர் பட்ட நுழை வுத் தேர்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து, கலந்தாய்வு நடத்தப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையாகப் பின் பற்றப்பட்டு, 115 இடங்களில் 106 மாணவர்களுக்கு முனைவர் பட்ட சேர்க்கை ஆணை அளிக் கப்பட்டது. மீதியுள்ள இடங்க ளுக்கும் விரைவில் கலந்தாய்வு நடத் தப்பட்டு, சேர்க்கை நடத்தப் படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், பதிவாளர்(பொ) மோ.கோ.கோவைமணி, புலத் தலைவர் கள் இரா.காமராசு, ரெ.நீல கண்டன், உதவிப் பதிவாளர் சு.செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்