வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
வேலூர் நறுவீ மருத்துவமனை யில் தாய்ப்பால் வார நிறைவு விழா நேற்று நடைபெற்றது. மருத்துவ மனை தலைவர் ஜி.வி.சம்பத் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனை செயல் இயக்குநர் பால் ஹென்றி வரவேற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறைத்தலைவர் மருத்துவர் கோமதி கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் ஜி.வி.சம்பத் பேசும் போது, ‘‘குழந்தைகள் ஆரோக்கியத் துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியம். இளம் தாய்மார்களிடம் தாய்ப்பால் வழங்குவது குறித்த தவறான எண்ணம் இருக்கிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் தமிழ்நாடு 45% ஆகவும் சட்டீஸ்கர் மாநிலத்தில் அது 75% ஆகவும் உள்ளது’’ என்றார்.
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசும்போது, ‘‘தாய்ப்பால் வழங்குவது குறைந்துவருவதால் குழந்தைகளின் ஆரோக் கியம் பாதிக்கப்படும். 100 சதவீதம் தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலகம் முழுவதும் தாய்ப்பால் வார விழா நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் வழங்க வேண்டும்’’ என்றார்.
தாய்ப்பால் வார விழாவை யொட்டி நடைபெற்ற சுவரொட்டி உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளைவழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சி யில், நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் அரவிந்தன் நாயர், பொதுமேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற் றனர். முடிவில், மருத்துவமனை தலைமை இயக்க அலுவலர் மணிமாறன் நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago