திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 13 ஆயிரம் பேரில் 5 ஆயிரத்து 834 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவல கங்களில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் வரவேற்றார். திருப்பத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் நல்லதம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமை வகித்து 1,782 பேருக்கு புதிய மின்னனு அட்டைகளை வழங்கிப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 லட்சத்து 10 ஆயிரத்து 462 குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்களை பெற்று வருகின்றனர். இதில், கரோனா பேரிடர் காலத்தில் அரசு வழங்கிய முதல் தவணை நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 99.2 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டது. 2-வது தவணையாக வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் 99.95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆயிரத்து 67 பேர் புதிய மின்னனு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித் திருந்தனர். அதில், தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
தகுதியில்லாத 4,724 விண்ணப் பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து, ஆம்பூர் வட்டத்தில் 1,915 பயனாளிகள், நாட்றாம்பள்ளி வட்டத்தில் 1,040 பயனாளிகள், திருப்பத்தூர் வட்டத்தில் 1,782 பயனாளிகள், வாணியம்பாடி வட்டத்தில் 1,097 பயனாளிகள் என மொத்தம் 5,834 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பயனாளிகளுக்கு விரைவில் புதிய மின்னனு அட்டைகள் வழங்கப்படும். புதிதாக குடும்ப அட்டைகள் பெற்ற பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்’’என்றார்.
அதேபோல, நாட்றாம்பள்ளி மற்றும் வாணியம்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர்கள் மோகன் (வாணியம்பாடி) மகாலட்சுமி (நாட்றாம்பள்ளி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago