குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள - கிணற்றை சுற்றி புதிய பாதுகாப்பு சுவர் அமைக்க இ.கம்யூ. வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றின் பக்கவாட்டு சுவரை அகற்றி புதியபாதுகாப்பு சுவர் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போயம்பாளையம் கிளை செயலாளர் சசிகுமார் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிச்சம்பாளையம் புதூரில் ஏற்கெனவே மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. அந்த கிணற்றின் ஒருபக்க பக்கவாட்டு பாதுகாப்புச் சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொடர்புடைய கிணறு அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி குழந்தைகள் அருகில் உள்ள கான்கிரீட் சாலையில் தான் விளையாடி வருகின்றனர். அவ்விடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமிருக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மோசமான நிலையில் உள்ள பக்கவாட்டுச் சுவரை அகற்றி விட்டு தரமான பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும்ஆபத்தானது ஆகும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்