காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. இதையடுத்து, பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், பொதுப்பணித் துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட சில அரசுத் துறை அலுவலங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் என்ற பெயரில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் காஞ்சிபுரம் மாவட்டம் என்ற பெயரை மாற்றி, செங்கல்பட்டு மாவட்டம் என்ற பெயர் பலகை அமைக்க வேண்டும் எனவும், பழைய மாவட்டத்தின் பெயர் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் எச்சரித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago