மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு வழங்கும் முகாம் :

By செய்திப்பிரிவு

18 வயது பூர்த்தி அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மை 40 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால், தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் இதற்கான முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமில் 64 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் பங்கேற்றனர். இக்குழந்தை களின் ஊனத்தின் தன்மை மற்றும் வயது சான்று போன்றவற்றை மருத்துவகுழுக்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. இக்குழுக்களின் பரிந்துரையின் அடிப்டையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டு, மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறிந்து, சளி பரிசோதனைக்கான (மென்டாக்ஸின்), தோல் ஊசி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 15 மாற்றுத்திறனாளிக்கு முதல்முறையாக மருத்துவ குழு சான்றிதழ்களுடன் கூடிய தேசிய அடையாள அட்டையினை ஆட்சியர் வழங்கினார்.இம்முகாமில் சமூக் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சமு ஏ.ராஜாமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்