திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை கண்டித்து நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையாக மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு தலைமை மருத்துவமனையாக இருந்தது முதல் திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மருத்து வமனை வளாகத்துக்குள் இயங் கியது. இங்கு இணை இயக் குநருக்கு தனி அறை மற்றும் அலுவலர்களுக்கான அறைகள் உள்ளன. நலப்பணிகள் இணை இயக்குநராக பணிபுரிந்த டாக்டர் சிவக்குமார் ஜூலை 31-ம் தேதி யுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து டாக்டர் பூங்கோதை இணை இயக்குநராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இணை இயக்கு நர் அறையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார் ஆக்கி ரமித்து அலுவல் பணியை மேற் கொண்டார். இதனால் டாக்டர் பூங்கோதைக்கு அறை இல்லாத நிலை ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், இணை இயக்குநர் அலுவலக அறையை ஆக்கிரமித்ததைக் கண்டித்து நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் நேற்று அலுவலகம் விட்டு வெளியே வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இணை இயக்குநர் (பொறுப்பு) பூங்கோதை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உயர திகாரிகளுக்கு தகவல் கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணலாம் எனக் கூறியதையடுத்து போராட் டத்தை கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago