கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குழித்துறையில் 7.2 மிமீ மழை பெய்திருந்தது. பெருஞ்சாணி, களியல், முள்ளங்கினாவிளையில் தலா 5 மிமீ, கோழிப்போர்விளை, ஆனைக்கிடங்கில் தலா 4, சிற்றாறு ஒன்று, புத்தன் அணை, சிவலோகத்தில் தலா 3 மிமீ, கன்னிமார், பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறில் தலா 2 மிமீ மழை பெய்தது.
மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 582 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 44.88 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 582 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71.51 அடியாக உள்ள நிலையில், அணைக்கு உள்வரத்து 24 கனஅடி மட்டுமே உள்ளது. அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நாகர்கோவில் நகருக்குகுடிநீர் வழங்கும் முக்கடல் அணைநீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஏமாற்றம் அளித்து வருகிறது. சில நாட்கள் லேசான மழையும், பெரும்பாலான நாட்களில் வறண்டவானிலையும் நிலவியது. வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஒரு வாரத்துக்குப் பின்னர் மீண்டும்சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப் பகுதியில் 30 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 8 மி.மீ., குண்டாறு அணையில் 3 மி.மீ., தென்காசியில் 2.60 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது.
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 73.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 71.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 125.50 அடியாகவும் இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago