நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் சேந்தமங் கலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்களுக்கு மனநல மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மனநல மருத்துவர் வ.முகிலரசி தலைமை வகித்துப் பேசியதாவது:
பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அளவிற்கதிகமான பயமும், பதற்றமும் மன அழுத்தத் திற்குக் காரணமாக அமைகின்றன.
தலை முதல் கால் வரை இதன் வெளிப்பாடுகள் அறிகுறிகளாக அமையும். தலையில், நெற்றியில் வியர்வை, லேசான தலைவலி, கண்களில் எரிச்சல், கண்களில் வீக்கம், மூக்கில் சுவாசத்தில் மாற்றம், மூக்கு விடைப்பு, உதடுகள் காய்ந்து, நாக்கு உலர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். தியானம், யோகாப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் போன்றவை இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும்.
மன அழுத்தத்தைக் குறைக்க டிரஸ் பால் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். மதுபோன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பயிற்சியில் மனநல ஆலோசகர் ரமேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago