கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இந்த முகாமில் 100 திருநங்கைகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, மாவட்டஎய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் திட்ட மேலாளர் செல்வம், நகராட்சி சுகாதார ஆய்வாளர்(பொறுப்பு) பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago