'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் :

By செய்திப்பிரிவு

கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வெங்கமேடு கொங்குநகர், கரூர் நகராட்சி பல்நோக்கு மைய கட்டிடம், தாந்தோணிமலை ஆகிய இடங்களில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

வெங்கமேடு கொங்குநகரில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கிய பேசியது: கடந்த ஜூன் 27-ம் தேதி இப்பகுதியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. ஒரே மாதத்தில், அவற்றில் 80 சதவீத மனுக்களை நிறைவேற்றுவதற்கான ஆணைகள் தற்போது வழங்கப்படுகின்றன. 3 இடங்களில் 5,176 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள், முதியோர் உதவித்தொகைகள் உள்ளிட்ட ரூ.3.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்