திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில், ஒரு சிலபள்ளிகளில் முதல் வகுப்பில்மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது.அப்பள்ளிகளில், புதன் தோறும் பெற்றோர், மாணவர்கள்மற்றும் பொதுமக்களை அழைத்து பஞ்சாயத்து அட்மிஷன் விழா நடத்தி மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது ‘‘திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் மற்றும்ஆங்கில வழியில் 13,604 பேர் சேர்ந்துள்ளனர். சில பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், அங்கு பஞ்சாயத்து அட்மிஷன் விழா நடத்தி மாணவர்கள் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago