திருநங்கைகள் 45 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீடில்லா ஏழைகளுக்கும், நீர்நிலை பகுதி களில் தங்கியுள்ளவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் சு.வினீத்உத்தரவின்பேரில், கோட்டாட்சியர் ப.ஜெகநாதன் தலைமையில், நெருப்பெரிச்சல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிகுடியிருப்பில் திருநங்கைகளுக்கான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 256 வீடுகளில் முதல்கட்டமாக 45 திருநங்கைகளுக்கு, தற்காலிக குடியிருப்பு ஆணையை சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அம்பிகா நேற்று வழங்கினார்.

முதல்கட்டமாக நபர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் செலுத்தி ஆணையை பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது ‘‘15 ஆண்டுகளாக திருநங்கைகளுக்கு வீடுகேட்டு போராடி வந்தோம். தற்போது குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏழ்மைநிலையில் உள்ள திருநங்கைகளுக்கு, இலவசமாக வீடு வழங்கவோ, ஒதுக்கீடு தொகையைக் குறைப்பதற்கோ தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்