சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களுக்கு லேப்ராஸ்கோப்பி பயிற்சி அளிக்கப்பட்டது. டீன் ரேவதி பாலன் தொடங்கி வைத்தார். துறைத் தலைவர் காயத்ரி வரவேற்றார். பேராசிரியர் கார்த்திகேயன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், துணை முதல்வர் சர்மிளா திலகவதி, நிலைய மருத்துவ அலுவலர் ரபீக் ஆகியோர் பேசினர். பேராசிரியர்கள் மருதுபாண்டியன் பயிற்சி அளித்தார்.
லேப்ராஸ்கோப்பி மூலம் கர்ப்பப்பை கட்டி, சினைப்பை கட்டிகளை அகற்றுதல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்வது குறித்து 50 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பேராசிரியர்கள் பீர்முகமது, கங்காலட்சுமி, ரவிசங்கர், வைரவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago