மன்னார்குடியில் ஒரே தெருவில் வசிக்கும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரே தெருவில் 14 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று முன்தினம் காளிகவுண்டர் தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் 14 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 14 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று உறுதிப்ப டுத்தப்பட்டது.

இதையடுத்து, காளிகவுண்டர் தெரு தனிமை படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த தெருவில் வசிக்கும் அனைவருக்கும் நேற்று நகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அப்பகுதியில் இன்று (ஆக.5) சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.

வெளியூரிலிருந்து அண்மையில் இங்கு வந்து தங்கிச் சென்ற நபர் மூலம் கரோனா தொற்று பரவி இருக்கக்கூடும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்