அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பா.ஹேமலதா நேற்றுவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘2021-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tngasa.org அல்லது www.tngasa.in என்றஇணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.48, பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 செலுத்தினால் போதும்.

பி.காம், பி.காம் பிஏ, பிகாம் ஐபி, பி.ஏ. ஆங்கிலம், பொருளாதாரம், பி.எஸ்சி வேதியியல், கணினிஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்