காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் கூறும்போது, “பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும், தாய்மார்கள் புரதச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகள், முளை கட்டிய பயிர்கள் மற்றும் மூக்கடலை போன்ற எளிதில் கிடைக்கும் உணவு வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் துண்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago