புதுச்சேரியில் 73 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் புதிதாக 73 பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

தற்போது 885 பேர் சிகிச் சையில் உள்ளனர். புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரையில் 1,795 பேர் உயிரி ழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 26பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 39பேர் குணமடைந்தனர். தற்போது 370பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 341பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 68 பேர் குணமடைந்தனர்.

இதுவரையில் 59,090பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 813 பேர் உயிரிழந்துள் ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்